ஓடும் ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம் - டிக்கெட் பரிசோதகர் கைது

 
l

ஓடும் ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில் டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் சிலரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

ku

 உத்தர பிரதேச மாநிலத்தில் சம்பல் பகுதியைச் சேர்ந்த பெண்,  சந்தவுசி பகுதியில் இருந்து பிரயாக்ராஜின் சுபதேர் கஞ்ச் பகுதிக்கு ரயிலில் பயணம் செய்திருக்கிறார். அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதராக இருந்தவர் ராஜூ சிங்.  அந்த ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு ராஜூ சிங் ஏற்கனவே அறிமுகமானவராக இருந்திருக்கிறார்.

 இதனால் அப்பெண்ணை அவர் ஏசி கோச்சில் பயணிக்க சலுகை அளித்திருக்கிறார்.   ஏசி கோச் சலுகை கிடைக்கிறது என்கிற எண்ணத்தில் ஏசி கோச்சிங் சென்று பயணித்திருக்கிறார்.  பின்னர் தான் அந்த பெண்ணுக்கு அந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது . 

அந்த டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங்,  அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.   அவர் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து சிலரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.   இதன் பின்னர பெண் அவர்களிடம் இருந்து மீண்டு வந்து பெண்,  ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரின் பேரில் ராஜு சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.  பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.