கத்திமுனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் கண்முன்னே நடந்த கொடூரம்

 
u

காதலனை கத்தி முனையில் வைத்து மிரட்டிக்கொண்டு காதலியை நான்கு பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  அந்த  நான்கு பேரும் முகமூடி அணிந்திருந்தாலும் அவர்கள் அடிக்கடி உச்சரித்துக் கொண்ட ஒரு பெயரை வைத்து போலீசில் சொன்னதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி அந்த நபரை கைது செய்துள்ளனர்.  தப்பிய ஓடிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றார்.   காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏனாத்தூரில் தனியார் கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார் அந்த பெண்.   அவர் தனது காதலருடன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.   அப்போது அவர்கள் இருந்த இடத்திற்கு வெகு தூரத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறது.  

h

 இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி குண்டுகுளம் என்கிற அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை மது அருந்தி கொண்டிருந்த அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் நோட்டமிட்டு இருக்கிறார்கள்.   பின்னர் அவர்கள் திட்டமிட்டு காதல் ஜோடியை நெருங்கி இருக்கிறார்கள்.  இருவரும் அதிர்ந்து போய் எழுந்து நிற்க ,  கத்தியை காட்டி விரட்டி அவர்களிடம் இருந்த பணம் செல்போன் உள்ளிட்டவற்றை பறித்திருக்கிறார்கள். 

 பின்னர்  போதையின் உச்சத்தில் இருந்த நான்கு பேரும் காதலனை கத்தி முனையில் மிரட்டி அந்த கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   பின்னர் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.

 இந்த சம்பவத்தை அடுத்து காதலியை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு தனது உறவினர்களிடம் விவரத்தை சொல்லி காவல் நிலையத்தில் அந்த இளைஞர் புகார் அளித்திருக்கிறார்.    அந்த நான்கு பேரும் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் சொல்ல முடியவில்லை அந்த இளைஞருக்கு.   ஆனாலும் இந்த சம்பவத்தின் போது அடிக்கடி அந்த நான்கு  பேரில் மூன்று பேர் விமல் விமல் என்று அடிக்கடி ஒரு பெயரை உச்சரித்ததை அந்த இளைஞர் போலீசில் சொல்லியிருக்கிறார்.

 இதை வைத்து அந்த பகுதியில் விமல் என்கிற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த போது,  அந்த அப்பகுதி மக்கள் விமல் என்பவரை சொல்லி இருக்கிறார்கள்.   சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரிக்க சென்ற போது,  அந்த வாலிபர் தப்பி ஓடி இருக்கிறார்.  அப்படி என்றால் இந்த நபர் தான் அந்த சம்பவத்தில் ஈடுபட்டு குற்றவாளி என்பது போலீசாருக்கு உறுதியாக தெரிந்ததும் அந்த வாலிபரை துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை  ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இதை அடுத்து தலைமறைவாக இருக்கும் மூன்று பேரையும் பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.