தனியே இருக்கும் பெண்கள்தான் குறி! வாகன சோதனையில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி

 
j


 வேலைக்கு செல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைத்த கள்ளக்காதல் ஜோடி தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.   போலீஸ் வாகன சோதனை போது அந்த கள்ளக்காதல் ஜோடி சிக்கி இருக்கிறது.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் செம்மங்காளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா.    இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.   கடந்த பத்தாம் தேதி அன்று இரவில் ஒரு ஆணும் பெண்ணும் கிருஷ்டினா கடைக்கு வந்திருக்கிறார்கள் . பழம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.   உடனே கிருஷ்டினா பழத்தை எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆவேசமாக பாய்ந்து கிருஷ்டினாவ்ன் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து விட்டு பைக்கில் தப்பி இருக்கிறார்கள்.

ku

 உடனே அருமனை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்யவும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.  இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் வேறு சில இடங்களிலும் அந்த ஆணும் பெண்ணும் கைவரிசையைக் காட்டி வந்து இருக்கிறார்கள்.  

 தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து தான் அவர்கள் இந்த கைவரிசையை காட்டி வந்தது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.  சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக -கேரளா எல்லை பகுதியான பனச்ச மூடு என்கிற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.  

  அப்போது சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் வந்த ஒரு ஆணையும் பெண்ணையும் போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.   விசாரணையில் அவர்கள் தான் குமரி மாவட்டத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து கொள்ளையடித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.  இருவரிடமும் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

 கேரள மாநிலத்தில் பள்ளிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்.  திருமணம் ஆகி இவருக்கு குழந்தைகள் இருக்கின்றார்கள்.  ஆனப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி.  இவர் கணவரை விட்டு பிரிந்து மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சதீஷ் ஊழியராக இருந்தபோது ஹோட்டலுக்கு பக்கத்தில் ஜவுளி கடையில் இருந்த சாந்தகுமாரியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  பின்னர் இந்த உறவு கள்ள உறவாக மாறி இருக்கிறது.  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

 ஆனால் வேலைக்குச் செல்லாமல் இப்படி இருவரும் உல்லாசமாக இருக்க அதற்கு என்ன வழி என்று யோசித்து, தனியே இருக்கும் பெண்களிடம் கொள்ளையடித்து, அந்த நகைகளை விற்று ஊர் சுற்றி உல்லாசம் அனுபவித்து வந்தது தெரிய வந்திருக்கிறது.   இருவரையும் கைது செய்த போலீசார் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இருக்கிறார்கள்.  நீதிபதியின் உத்தரவின் படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.