ஒரு இளைஞரை கடத்தி 4 பெண்கள் கூட்டு பலாத்காரம்!

 
rape

பஞ்சாப்பில் 4 பெண்களால் கடத்தப்பட்ட இளைஞர், வனப்பகுதியில் வைத்து கற்பழிக்கப்பட்ட கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Until we treat rapists as ordinary criminals we won't stop them | Aeon  Essays

ஜலந்தர் நகரில், 20 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள், தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரியும் ஒரு இளைஞரிடம் முகவரி கேட்பதுபோல் கேட்டு, அவரை காரில் கடத்தியுள்ளனர். பின்னர், அவர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஊடகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். 

அந்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்கள் போதைப்பொருள் அருந்தி இருந்ததாகவும், அவர்கள் தன் கண்களில் மருந்து தெளித்து தன்னை மயக்கமடைய செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் கையை பின்னால் கட்டிப்போட்டு, நான்கு பெண்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் ஒதுக்குபுறமான இடத்தில் தன்னை வீசிவிட்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஆனால் அந்த இளைஞர் பெண்கள் மீது போலீசில் புகார் அளிக்கவில்லை. தனது மனைவி புகார் அளிக்க வேண்டாம் என கேட்டுகொண்டதால் இந்த விவகாரத்தை போலீசிடம் எடுத்து செல்லவில்லை என்றார். இந்த சம்பவம் வைரலாக பரவியதால், பஞ்சாப் போலீஸ் இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரணையை துவங்கியுள்ளது.