மனைவி மீது காரை ஏற்றிவிட்டு காதலியுடன் தப்பிய திரைப்பட தயாரிப்பாளர்

 
ம்

மனைவி மீது காரை ஏற்றிவிட்டு காதலியுடன் தப்பிச்சென்றிருக்கிறார் திரைப்பட தயாரிப்பாளர்.  காருக்குள் அழகியுடன் தனிமையில் இருந்தபோது அதை தட்டிக் கேட்ட மனைவி மீது ஆத்திரத்தில் அவர் மீது காரை ஏற்றி இருக்கிறார்.  இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பையில் அந்தேரி மேற்கு நியூ லிங்க் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 19ஆம் தேதி அன்று வாகன நிறுத்தத்தில் இந்தி பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா காரில் இருந்துள்ளார்.   அவருடன் காரில் மாடல் அழகி ஒருவரும் இருந்திருக்கிறார்.  அந்த மாடல் அழகி தயாரிப்பாளரின் கள்ளக்காதலி என்று சொல்லப்படுகிறது.

க்ம்

 அப்போது திடீரென்று தயாரிப்பாளரை தேடி அவரது மனைவியும் போஜ்புரி நடிகையுமான யாஸ்மின் அங்கு சென்று இருக்கிறார்.   தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்து,  கணவரிடம் சத்தம் போட்டு இருக்கிறார். 

 இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  அப்போது தயாரிப்பாளர் மாடல் அழகியுடன் காரில் இருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார் .  மனைவி அதை தடுக்க முயன்றிருக்கிறார் . தடுக்க முயன்ற போது திடீரென்று தவறி கீழே விழுந்து இருக்கிறார்.   மனைவி என்றும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் மனைவி மீது காரை ஏற்றிவிட்டு தப்பி சென்று இருக்கிறார் தயாரிப்பாளர்.

 கார்  ஏறியதில் அப்பெண்ணின் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது.  இதை அடுத்து அங்கிருந்தோர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  இந்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.   இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தயாரிப்பாளரை கைது செய்ய தேடி வருகின்றனர்.