கோட்டையில் பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை! காதலன் கண் முன்னே நடந்த கொடூரம்!

 
ggr

 காதலனுடன் வேலூர் கோட்டையை சுற்றிப் பார்க்கப் போன காதலியை மூன்று பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.  காதலனை அடித்துப் போட்டு விட்டு அவரின் கண் முன்னே இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.  தனியார் துணிக்கடையில் வேலை செய்துவந்த இந்த காதலர்களுக்கு நேர்ந்த துயரத்திற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.    32 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த அந்த ஆணும் பெண்ணும்  காதலித்து வந்து இருக்கிறார்கள்.   அந்த காதலர்கள் வேலை முடிந்த பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதியன்று வேலூர் கோட்டையை சுற்றிப் பார்க்க சென்றிருக்கிறார்கள்.   அப்போது அங்கு வந்த 3 பேர் அந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு,  அவர்களிடம் இருந்த  இரண்டு செல்போன்,  அந்தப்பெண் காதில் அணிந்திருந்த கம்மல்,  அவர்கள் வைத்திருந்த 350 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக்  கொண்டிருக்கிறார்கள்.

gar

 அதுமட்டுமல்லாமல் மூன்று பேரும் சேரும் மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   இதன் பின்னர் பாதிக்கப்பட்ட அந்த பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு சென்று துணிச்சலாக புகார் அளித்திருக்கிறார்.

 பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி  24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டார்கள்.   வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,  வசந்த புரத்தைச் சேர்ந்த சக்திவேல்,  17 வயது சிறுவன் 3 பேரையும் கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து திருட்டுப் பொருளை வாங்கி விற்பனை செய்யும் மாரிமுத்து என்பவரையும் கைது செய்தனர்.

 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.   இதில் மூன்று பேரையும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும்.  17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறார் சிறையில் அடைத்தனர்.

 இந்த வழக்கு வேலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.    இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  மணிகண்டன் சக்திவேல் ஆகிய இரண்டு பேருக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனை உட்பட 32 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உள்ளார் .திருட்டு பொருட்களை வாங்கிய குற்றத்தை மறைத்த மாரிமுத்துவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.