பெற்ற மகளை 2 ஆண்டுகளாக.. தந்தைக்கு சாகும் வரை சிறை

 
t

இரண்டு ஆண்டுகளாக பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது கேரளா உயர் நீதிமன்றம்.  

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அந்த 13 வயது  சிறுமிக்கு பள்ளியில் கவுன்சிலிங் வழங்கப்பட்டிருக்கிறது.   அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி இருக்கிறார்.    தனது தந்தையே தன்னை இரண்டு வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்.  

k

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர்,   போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  அந்த சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.   அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினர்.

 திருவனந்தபுரம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.  விசாரணைகள் முடிந்து நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார்.  சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருந்தார்.

h

இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி மேல்முறையீடு செய்திருந்தார்.  இந்த வழக்கில் விசாரணை முடிந்து கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.   குற்றவாளிக்கு கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது.

 இந்த வழக்கு தீர்ப்பு கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.