பாலியல் தொழிலாளியை தீர்த்துக்கட்டிய முன்னாள் கணவன்! பிணத்துடன் பைக்கில் பயணம்!

பாலியல் தொழிலாளியை தீர்த்துக்கட்டிய முன்னாள் கணவர் பிணத்துடன் பைக்கில் பல மைல் தூரம் பயணம் செய்து இருக்கிறார். சடலமாக கிடந்த பிரியாவின் மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் கடந்த வாரத்தில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்தது . இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சடலம் கிடந்த இடத்தில் கிடந்த தடயங்களை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது அந்த பெண் காவேரி பாகத்தை சேர்ந்த 26 வயதான பிரியா என்பது தெரியவந்தது. திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் . இதையடுத்து வெங்கடேசனை பிடித்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், வெங்கடேசன் தலைமறைவாக இருந்து வந்தார். அந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிரியா கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் புரோக்கர் ஜோதி என்பவருடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்கு வெங்கடேசன் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் வெங்கடேசன் ஜோதி இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியாவின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார் பிரியா.
பிரியாவை விட நபி 3 வயது சிறியவர் நவீன். கடந்த 2008ஆம் ஆண்டில் இருவருக்கும் இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில் பிரிவினை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் கணவனை இழந்த காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற பாலியல் தொழிலாளியுடன்நவீனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சின்ன வீடு எடுத்து கல்பனா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கல்பனாவின் சகோதரர்கள் இருவரும் கஞ்சா வியாபரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
பாலியல் தொழில் செய்து வந்த பிரியா, முதல் கணவர் தன்னை பார்க்கும்போதெல்லாம் அவரை திட்டி வந்துள்ளார் கல்பனா. அவரது தம்பி காளிதாஸ் ஆகியோரையும் காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து தகவல் கொடுக்க , அவர்களை சில மாதங்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து பிரியாவை கொலை செய்ய கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
தன்னைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கண்டபடி திட்டி அவமதிப்பதால் ஆத்திரத்தில் இருந்த முதல் கணவர் நவீனும், கஞ்சா வழக்கில் தன்னை சிறைக்கு அனுப்பி விட்டார் என்று பிரியா மீது ஆத்திரத்தில் இருக்க கல்பனாவும், பாதிக்கப்பட்ட கல்பனாவும் நவீனம் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதையடுத்து காஞ்சிபுரத்திற்கு ஒரு தனியார் ஹோட்டலுக்கு சமாதானம் பேச பிரியாவை அழைத்து இருக்கிறார்கள். அங்கே பிரியா, நவீன், கல்பனா மூன்று பேரும் மது அருந்தி இருக்கிறார்கள். பின்னர் பிரியாவை காஞ்சிபுரத்தில் திருவீதி குளம் பகுதியில் இருக்கும் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்றதும் நவீனும் கல்பனாவும் சேர்ந்து பிரியாவை அடித்து துப்பட்டா மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். சடலத்தை பைக்கில் வைத்துக்கொண்டு வாலாஜாபாத் வழியாக ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் காலி நிலத்தில் வீசியிருக்கிறார்கள். பிரியாவின் முகத்தை எரிக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.
போலீசார் விசாரணையில் இது தெரியவந்ததை அடுத்து நவீன் -கல்பனா இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.