அப்போதும் கூட அந்த மாணவி சுதாரித்து ஓடவில்லை; இரண்டு மாணவர்கள் சிறையிலடைப்பு

 
bd


பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள்தான் காரணம் என்பதை சொல்லியிருக்கிறார்.   இதை அடுத்து அந்த மாணவர்களை போக்சோவில் கைது செய்துள்ளனர்.

 திருவள்ளூரில் உள்ள அந்த தனியார் பள்ளியில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் .  அதே பள்ளியில் படிக்கும் வேப்பம்பேடு பகுதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுடன் நட்பாக பழகி வந்திருக்கிறார்.  

 பள்ளி முடிந்து வழக்கம் போல் வீட்டுக்கு செல்வதற்கு தயாராக இருக்கிறார் அந்த மாணவி.  அப்போது இருவரும் தங்கள் வீட்டுக்கு மாணவிஐ அழைத்து இருக்கிறார்கள் . அந்த மாணவியும் அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டு வேப்பம்பட்டுக்கு சென்று இருக்கிறார் .  அந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் . 

jj

உங்கள் வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்.  வீட்டினர் எல்லோரும் வெளியூர் போயிருப்பதா சொல்லியிருக்கிறார்கள்.   அப்போதும் கூட அந்த மாணவர்களை நண்பர்கள் என்று அந்த சிறுமி நம்பி இருக்கிறார் . பின்னர் அந்த சிறுமியை இருந்தது பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் .  இதைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கிறார்கள் .  

சிறுமியும் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார்.   திடீரென்று சிறுமியில் நடத்தையில் மாற்றம் இருப்பதை  கவனித்த பெற்றோர்,  மகளை  மருத்துவமனை அழைத்து சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.  மகளிடம் விசாரித்த போது அந்த இரண்டு மாணவர்கள் செய்த செயலை சொல்லி இருக்கிறார்.   இதை அடுத்து பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள் .  போலீசார்  வழக்கு பதிவு செய்து இரண்டு மாணவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து இருக்கிறார்கள்.