பேருந்தில் மாணவியை அடித்து, கடித்த ஓட்டுநர் -வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

 
v

 பேருந்தில் ஏழாம் வகுப்பு மாணவியை அடித்து ,உதைத்து, கடித்து காயப்படுத்தி இருக்கிறார் ஓட்டுனர்.  இந்த அதிர்ச்சி வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 அமெரிக்காவில் டெட்ராய்ட் பகுதியில் பள்ளி பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது,  ஒரு மாணவரை இறக்கி விடுவதற்காக சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது .  அதே இடத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி ஏறி இருக்கிறார். 

 பேருந்து ஏறி உள்ளே  சென்றதும் வெளியே இருக்கும் சகோதரரிடம் ஜன்னல் வழியாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.   அப்போது  பெண் ஓட்டுநர் அந்த மாணவியை உட்காரச் சொல்லி தோளில் வேகமாக தட்டி இருக்கிறார்.   கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டு தோளில் தட்டி இருக்கிறார்.


 சிறுமி மாணவி அதை பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார்.  இதனால் ஆத்திரம் அடைந்த பெண் ஓட்டுனர் அந்த சிறுமியை கொடூரமாக தாக்கியிருக்கிறார்.  இதில் அந்த சிறுமியின் முகம் ,கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.   மாணவியின் உடலிலும் முகத்திலும் அந்த பெண் ஓட்டுநர் கடித்திருக்கிறார்.  இதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

 இதை அடுத்து அந்த பள்ளி பேருந்தில் இருந்த மாணவிகள் அனைவரும் வெளியேறி இருக்கிறார்கள்.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பள்ளி நிர்வாகத்திற்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். பலத்த காயம் அடைந்த அந்த ஏழாம் வகுப்பு  படிக்கும் 12 வயது சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 பாதிக்கப்பட்ட சிறுமியை குடும்பத்தினரும் போலீசில் புகார் அளிக்க இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பள்ளி நிர்வாகம் அந்தப் பெண் ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் . 

மாணவியை பெண் ஓட்டுநர் கொடூரமாக தாக்கும் அந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.