மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகள்-தப்பி ஓடியபோது பிடிபட்டார்

 
k

 சொத்துக்காக மருமகளே மாமியாரை கொலை  செய்துள்ளார்.   போளூர்  பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் அருகே பு புலிபானந்தன் கிராமம்.    இக்கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி காசியம்மாள்.  இவரின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு  காலமாகிவிட்டார் .   இந்த மூதாட்டிக்கு செல்வம், ராஜி ,சின்ன பையன் என்ற மூன்று மகன்கள்  இருந்தனர்.   இதில் இரண்டு மகன்கள் இறந்து விட்டதால் மூன்றாவதுமகன்  சின்னப்பையன் பராமரிப்பில் தான் மூதாட்டி காசி அம்மாள் இருந்து வந்திருக்கிறார் .

காசி அம்மாவுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது.    சின்ன பையன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு அருகில் இருக்கும் சமுதாய கூடத்தில் தனியாக தங்கி வந்துள்ளார் காசி அம்மாள். 

t

 இந்த நிலையில் தான் கடந்த ஒன்றாம் தேதி காசி அம்மாள் மர்மமான முறையில் கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.   அவர் அணிந்திருந்த கம்மளும்,  அவரிடம் இருந்த பணமும் காணாமல் போயிருந்தன. 

 சம்பவம் குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  போலீசார்ரின் விசாரணையில் காசியம்மாளின் மருமகள்கள் மீது சந்தேகம் இருந்திருக்கிறது.  இந்த சந்தேகத்தின் அடிப்படையில்  விசாரணை நடத்தி வந்துள்ளனர்.   அப்பொழுது தான் காசியம்மாள் குறித்து கிராமத்தில் விசாரணை நடத்திய போது போலீசாருக்கு சில தகவல்களை தெரிய வந்திருக்கின்றன.

 மூத்த மருமகள் செல்வம் மனைவி தேவகிக்கும் காசி அம்மாளூக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது .  இதை அடுத்து போலீசார் தேவகியை பிடிக்க சென்றிருக்கிறார்கள்.   இதை அறிந்த தேவகி கூலி வேலை செய்து வந்த இடத்தில் இருந்து தப்பி சென்று இருக்கிறார்.  கொம்மனேந்தல் பேருந்து நிலையம் சென்றிருக்கிறார்.   போலீசார் விரட்டி சென்று தேவகியை கைது  செய்துள்ளனர்.

 மாமியார் காசியம்மாளிடம் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை மூன்று பாகங்களாக பிரித்துக் கொடுக்க தேவகி கேட்டு வந்திருக்கிறார்.  ஆனால் மாமியார் காசியமாள், 2 ஏக்கர் நிலத்தையும் இளைய மகன் சின்ன பையனுக்குத் தான் கொடுப்பேன் என்று சொல்லி வந்திருக்கிறார்.   இதனால் மாமியார் காசியம்மாளை கத்தியால் குத்தி கொன்றிருக்கிறார் தேவகி.

 தேவகி கைது செய்யப்பட்டு போளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு,   வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.