மாமியார் தேர்வுக்கட்டணம் தராததால் மருமகள் எடுத்த விபரீத முடிவு

 
d

 மாமியார் தேர்வு கட்டணம் தராததால் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி அடுத்த தானந் தாங்கியை சேர்ந்தவர் காயத்திரி.   கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தபோது வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் காதல் உண்டாகியிருக்கிறது .  இருவரும் உடனே திருமணமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இத்தம்பதிக்கு 4 மாத பெண் குழந்தையும் உள்ளது.

ir

 திருமணத்திற்கு பின்னரும் காயத்ரி படிப்பை தொடர்ந்து வருகிறார்.   தற்போது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை.   இதனால் மாமனார்,  மாமியாரிடம் தேர்வு கட்டணம் குறித்து கேட்டிருக்கிறார் காயத்திரி.   அதற்கு மாமியார் கடுமையாக காயத்ரியை திட்டி இருக்கிறார்.  தேர்வு கட்டணத்தை உன் தந்தையிடம் போய் வாங்கிக்கொள் என்று சொல்லியிருக்கிறார்.

 இதனால் மனமுடைந்த காயத்திரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.   திருமணமாகி ஒரு ஆண்டிலேயே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் காயத்ரியின் சாவில் மர்மம் இருப்பதாக சொல்லி அவரது உறவினர்கள் திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் 2 மணி நேரமாக திருவாரூர் -திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 பின்னர் போலீசார் வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.