திமுக வார்டு உறுப்பினரின் தலையை வெட்டி வீசிவிட்டு தப்பி ஓடிய பெண்

 
k

திமுக வார்டு உறுப்பினர் சதீஷின் தலையை வெட்டி வீசிவிட்டு பெண் தப்பி ஓடி இருக்கும் செயல் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எட்டியாபுரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எட்டையாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சதீஷ்.  இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராக உள்ளார்.   திமுக பிரமுகரான சதீஸ் அந்தப் பகுதியில் நடைபெறும் சில சமூக விரோத செயல்களை குறித்து அடிக்கடி போலீசுக்கு சொல்லி அந்த சமூக விரோத செயல்களை தடுத்து வந்திருக்கிறார்.

க்

 அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்கிற 45 வயது பெண் டாஸ்மாக்கில் இருந்து மது  வகைகள் வாங்கி கொண்டு வந்து டாஸ்மாக் கடை மூடிய சமயங்களில் அதிக விலைக்கு வீட்டில் வைத்து விற்று வந்துள்ளார்.  பாலியல் தொழிலும் நடத்தி வந்துள்ளார்.   இந்த இரண்டு விவகாரங்களையும் சதீஷ் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.  இதனால் போலீசார் கள்ளச் சந்தையில் லோகேஸ்வரி மதுவை விற்க விடாமலும்,  அவர் பாலியல் தொழிலை நடத்த விடாமலும் தடுத்துள்ளனர்.  இதனால் வருமானம் இழந்து தவித்து இருக்கிறார் லோகேஸ்வரி.   இதற்கெல்லாம் காரணமான சதீஷை தீர்த்த கட்டிவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி அவரை வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். 

ச்க்

 வீட்டிற்கு வந்த சதீஷின் தலையை வெட்டி எடுத்து கேட்டிற்கு வெளியே தூக்கி வீசிவிட்டு தலைமறைவாக இருக்கிறார்.  தகவல் அறிந்த சோமங்கலம் போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லோகேஸ்வரியை கைது செய்ய அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.