மனைவியின் புகைப்டத்தை வாட்ஸ்அப் டிபி-யில் வைத்த கணவருக்கு நேர்ந்த கொடுமை

 
i

மனைவியின் புகைப்படத்தை வாட்ஸ்அப் டிபியில் வைத்ததால் கணவருக்கு நேர்ந்த  அதிர்ச்சியை அடுத்து போலீசார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். 

சென்னை அயனாவரத்தில் குன்னூர் சாலையில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் நந்தகுமார்.   இருசக்கர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையை இவர் சொந்தமாக நடத்தி வருகிறார்.   இவர் தனது வாட்ஸ் டீல்ல் மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்திருக்கிறார்.

 மனைவியின் மீது உள்ள காதலை வெளிப்படுத்த அவர் அந்த படத்தை வாட்ஸ்அப்பில் வைத்திருந்திருக்கிறார் . ஆனால் அது அவருக்கு வினையாக ஆகிவிட்டது. அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த போட்டோவை எடுத்து மார்பிங் செய்து ஒரு நிர்வாண ஆணுடன் இருப்பது போன்று மார்பிங் செய்து இருக்கிறார்.

வெ

 நந்தகுமார் மனைவியின் முகத்தை மாற்றி மார்பிங் செய்து பல்வேறு ஆபாச புகைப்படங்களை உருவாக்கியிருக்கிறார்.   சித்தரிக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களை நந்தகுமாரிக்கே அனுப்பி வைத்திருக்கிறார் அந்த மர்மநபர்.    இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து போட்டோக்களை அனுப்பி வைத்த மர்ம நபருக்கு போன் செய்திருக்கிறார். உடனே அந்த மர்ம நபர் போனை எடுத்து தான் சொல்லும் செல்போனுக்கு ஜிபே மூலம் பணத்தை அனுப்ப வேண்டும்.  இல்லை என்றால் இந்த ஆபாச  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் .

பணத்தை தராமல் நம்பரை பிளாக் செய்து விட்டாலும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.   இதனால் நந்தகுமார் போலீசுக்கும் செல்லமுடியாமல் மனைவியிடம் மட்டும் சொல்லி புலம்பி இருக்கிறார்.   இந்த விவகாரத்தில் நந்தகுமாரும் அவரது மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.  இதன் பின்னர் வேறு வழியின்றி இதற்கு மேலும் நாம் முட்டாள்தனம் செய்யக்கூடாது என்று அயனாவரம் காவல் நிலையத்தில் சென்று தம்பதி புகார் அளித்துள்ளனர்.  வழக்கு பதிவு செய்த அயனாவரம் போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை தேடி வருகின்றனர்.