40 முறை சரமாரியாக கத்தியால் குத்திய கள்ளக்காதலி! கடைசியாக உன்னை பார்த்துக்கொள்கிறேன்; இனி தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டு கொலை

 
s

கடைசியாக உன்னை பார்த்துக்கொள்கிறேன்; இனி தொந்தரவு செய்யமாட்டேன் என்று சொல்லி காதலனை வரவழைத்த கள்ளக்காதலி என் கையால் சமைத்த சாப்பாடு என்று விஷம் கலந்த சாப்பாட்டை போட்டு 40 முறை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்ற பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அடுத்த அருகு விளை.  இப்பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது35).  இவர் ஆரல்வாய் மொழியில் அரசு இஎஸ்ஐ மருந்து ஊழியர் .  மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஷீபா(வயது37).  திருமணமாகி கணவர் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து இருக்கிறார்.

sh

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக கருங்கல் இஎஸ்ஐ மருந்தகத்தில் ரதிஷ்குமார் பணிபுரிந்த போது சிகிச்சைக்கு சென்ற ஷீபாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சதீஷ்குமார் உடன் கள்ள உறவு ஏற்பட்டு இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இதனால் கணவரிடமிருந்து விவாகரத்தும் பெற்றிருக்கிறார்.  இந்த நிலையில் சதீஷ்குமார் சென்னை ஐடி துறையில் பணிபுரியும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்,   திருமணத்திற்கு பின்னர் ஷீபாவுடன் ஆன தொடர்பை முற்றிலும் துண்டித்திருக்கிறார்.

 இதனால் ஷீபா கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்.  இந்த நிலையில் நேற்று ரதீஷ்குமாரிடம் போனில் பேசிய ஷீபா,   கடைசியாக ஒருமுறை நேரில் பார்த்துக் கொள்கிறேன்.  இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சொல்லி அழைத்திருக்கிறார்.   அதை நம்பி ரதிஷும் மருந்தகத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார்.  ஆரல்வாய் மருந்தகத்திற்குச் சென்ற ஷீவா,   தான் சமைத்துக் கொண்டு வந்த சாப்பாட்டை பரிமாறி இருக்கிறார். 

 ஆசை ஆசையாக சாப்பிட்ட ரதீஷ் தள்ளாடி இருக்கிறார்.   அப்போதுதான் சாப்பாட்டில் விஷம் கலந்திருப்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது.  அவர் தள்ளாட ஆரம்பித்ததும் தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து ரதீஷை சரமாரியாக குத்தி இருக்கிறார்.   ஆத்திரம் தீர 40 முறை கத்தியால் சரமாரியாக குத்தியதில் இரத்த  வெள்ளத்தில் ரதீஷ் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.   இதற்குள் விஷயத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார் ஷீபாவை கைது செய்துள்ளனர்.