மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை : சப்-இன்ஸ்பெக்டர் சிறையிலடைப்பு

 
re

 கல்லூரி மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை  கொடுத்து வந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

சென்னை மாநகர காவல் துறையில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் 50 வயதான பாண்டியராஜ். மனைவி,  பிள்ளைகளுடன் ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.   இவருக்கும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ள உறவு இருந்து  வந்ததாக கூறப்படுகிறது.

po

 கணவரை பிரிந்து வாழும்  அந்த பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்த பாண்டியராஜ் அந்த பெண்ணின் பள்ளி செல்லும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வைத்து வந்திருக்கிறார்.   கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து அந்த மாணவிக்கு  பாண்டியராஜ் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.   அப்போது அந்த சிறுமிக்கு 13 வயது .  அந்த சிறுமியை பாண்டியராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து பாலியல் தொல்லை செய்து வந்த பாண்டியராஜ்,  தற்போது கல்லூரி செல்லும் அந்த பெண்ணுக்கு  தொடர்பு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக யாரிடமாவது வெளியே புகார் சொன்னால் பாலியல் வன்கொடுமை செய்த போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

 இதற்கு மேலும் பொறுமையாக இருக்க கூடாது என்று நினைத்து அந்த பெண் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  இது குறித்து நடந்த விசாரணையில் அந்த மாணவியை பல வருடங்களாக பாண்டியராஜ் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது.  இதனால்  வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.