அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் என் கண்முன்னே கொடுக்கணும் -ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண் நீதிபதி முன் வாக்குமூலம்

 
ac

 எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு தான் என் மீது ஆசிட் வீசினான்.  அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் என் கண்முன்னே தான் கொடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.   ஆசிட் வீச்சுக்கு ஆளான இளம்பெண் பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வரும் அந்த 25 வயது இளம்பெண் காமாட்சி பாளையா அருகே உள்ள சுங்கதகட்டே பகுதியிலிருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். 

 கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியன்று இவரை ஒருதலையாக காதலித்து வந்த நாகேஷ் என்ற 29 வயது இளைஞர் ஆசிட் வீசியதில் பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.   தலைமறைவாக இருக்கும் நாகேஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

acc

 நாகேஷின் பெற்றோர், அவரது அண்ணன், நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.    நாகேஷை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.  நாகேஷ் தமிழகத்தில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததையடுத்து தமிழ்நாட்டிலும் தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு 2 மாதங்களாக தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணிடம் நேரில் சென்று நீதிபதி வாக்குமூலம் பெற்றிருக்கிறார்.   அந்த வாக்குமூலத்தில்,  ’’என் தந்தை வீட்டின் முன்பாக காய்கறி கடை நடத்தி வருகிறார்.   அம்மா லட்சுமிஅம்மா வீட்டில் இருக்கிறார்.  அக்கா பிரீத்தி சாப்ட்வேர் இன்ஜினியர்.  தம்பி விசுவா கல்லூரியில் படித்து வருகிறார்.   நான் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். 

 ஏழு வருடங்களுக்கு முன்பாக எனது பெரியம்மா வீட்டில் நாகேஷ் குடும்பத்தினர் வாடகைக்கு இருந்தார்கள்.   அப்போதே நாகேஷ் என்னிடம் என்னை காதலிப்பதாக சொன்னான்.   ஆனால் நான் அவன் காதலை ஏற்கவில்லை.   அதன்பின்னர் அவனும் காதல் பற்றி என்னிடம் எதுவும் பேசவில்லை.    கடந்த ஒரு வருடமாக என்னையே சுற்றி சுற்றி வந்து காதலிக்கும்படி கேட்டு வந்தான்.   திருமணம் செய்து கொள்ளும்படியும் சொல்லி வந்தான்.   பல தொல்லைகளை கொடுத்து வந்தான்.   அப்பாவிடம் இதைப் பற்றி சொன்னபோது அவரும் நாகேஷை அழைத்து நீதி மாதிரி செய்யக்கூடாது என்று கண்டித்தார்.

g

 ஆனால் நாகேஷ் கேட்கவில்லை.  கடந்த 27ம் தேதி என் அலுவலகத்திற்கு வந்த நாகேஷ்,   என்னை காதலித்து திருமணம் செய்ய வேண்டும்.  நீ என்னை காதலித்து திருமணம் செய்யாவிட்டால் எனக்கு கிடைக்காத உன்னை யாருக்கும் கிடைக்க விடமாட்டேன் என்று மிரட்டி விட்டுச் சென்றார் .  அதுமட்டுமல்லாமல் நான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலாளரிடம் பேசி என்ன செய்கிறேன் பார் என்று மிரட்டினார்.

 இந்த நிலையில்தான் இருபத்தி எட்டாம் தேதி காலையில் என் அலுவலகத்தில் விட்டுவிட்டுச் சென்றார் அப்பா.   அவர் சென்ற பின்பு நான் அலுவலகத்திற்கு நுழைந்தபோது நுழைவுவாயிலில் நாகேஷ் நிற்பதை பார்த்தேன்.   மேலாளரிடம் சொல்லி மிரட்ட போகிறான் என்றுதான் நான் நாகேஷிடம் பேசுவதற்காக நெருங்கி வந்தேன்.   அப்போது கையில் ஏதோ ஒரு கவர் வைத்துக் கொண்டு என்னை நெருங்கி வருவதைப் பார்த்ததும் நான் சந்தேகப்பட்டு ஓட முற்பட்டேன்.  ஆனால் வேகமாக ஓடிவந்து நான்  கவரை பிரித்து மீது வீசினான்.   பின்னர்தான் அது ஆசிட் என்பது தெரியவந்தது.  கை, கால் ,முகத்தில் பலத்த காயம் உண்டானது .  நான் அலறித் துடித்தேன்.  அங்கிருந்தவர்கள் ஓடிவந்தார்கள்.  அவன் தப்பி ஓடி விட்டான்.  கொலை செய்யும் நோக்கில் தான் அவன் ஓடி வந்திருக்கிறான்.  யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று சொன்னவன் அதை நிறைவேற்றும் நோக்கத்தில் தான் வந்திருக்கிறான்’’ என்று சொல்லி இருக்கிறார்.

 நீதிபதிக்கு முன்னதாகவே இளம் பெண் தனது தாயிடம் பேசியபோது,   நாகேஷுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை என் கண் முன்பு கொடுக்க வேண்டும் என்னை போல வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று சொல்லி அழுதிருக்கிறார்.