கல்லூரி காதலர்கள் ரகசிய திருமணம் - 6 மாதத்தில் கள்ளக்காதலனுடன் ஓட்டம் - கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

 
zb

 கல்லூரியில் படித்து வந்த அந்த மாணவனும் மாணவியும் காதலித்து வந்திருக்கிறார்கள்.   வீட்டிற்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில்  வசித்து வந்திருக்கிறார்கள்.   திருமணமான ஆறு மாதத்தில்  திடீரென்று காதல் மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.  இதில் அதிர்ச்சியான கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 நாமக்கல் மாவட்டத்தில் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம்.  இவரது மகன் விமல் குமார்.  21 வயதான இந்த இளைஞர் நாமக்கல் அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் பி. காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.  அதே கல்லூரியில் படித்து வந்த தர்மபுரியை சேர்ந்த மாணவி சுமலதாவும் இந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள்.

j

 கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டுக்கு  தெரியாமல் ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு நாமக்கல்லில் உள்ள தாத்தா வீட்டில் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள்.    

திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின்னர் தனது காதல் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் கள்ள உறவு இருக்கிறது என்பது விமல்குமாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதில் அவர் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். 

 இது குறித்து மனைவியிடம் கேட்டபோது,  அவர் சரியாக முகம் கொடுத்து பேசாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்த விமல் குமார் மனைவியை கண்டித்து இருக்கிறார்.   இதனால் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆகி இருக்கிறார் மனைவி.  இதில் மணமடைந்த விமல் குமார் போடிநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

 தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.   விமல் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார்,   வழக்குப்பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.