கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை - காதலன் மீது சந்தேகம்

 
k

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி காதலனுக்கு சொந்தமான இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து  காதலன் கொலை செய்திருப்பதாக  மாணவியின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 ஆந்திர மாநிலத்தில் சத்யசாயி மாவட்டம் கோரண்ட்லா.   இப்பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ்வி  திருப்பதியில் தங்கி இருந்து பி .பார் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.   இந்த நிலையில் சத்தியசாயி  மாவட்டம் மல்லாபள்ளி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள அறை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

b

 அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதிக் என்பவருக்கு சொந்தமான  விவசாய நிலம் என்பது தெரிய வந்திருக்கிறது.   அந்த மாணவியை சாதிக் காதலித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.   இதனால் அவர் மீது சந்தேகம் எழுரந்திருக்கிறது.

 திருப்பதியில் படித்துக் கொண்டிருந்த பெண்ணை சாதிக் இங்கு அழைத்து வந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியரின் பெற்றோரும் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

 போலீசார்,  மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வரட்டும் .  அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்கிறோம் என்று சொல்லவும்,  சமாதானமாகி போலீஸ் வளாகத்தில் நடத்திய  ஆர்ப்பாட்டத்தை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.