பாலியல் தொழிலுக்கு பழக்கப்படுத்த கூட்டு வன்கொடுமை! வீட்டு வேலைக்கு சென்று சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

 
rஅ

பதினாறு வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்தவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்திருக்கிறது.

 அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா.   இவர் 16 வயது சிறுமி ஒருவரை தனது வீட்டு வேலைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 வீட்டிற்குச் சென்றதும் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கிறார்.   அதில் சிறுமி மயங்கியதும்  பலர் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   வீட்டு வேலைக்கு என்று தன்னை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நினைக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.  

ஜ

 இதையடுத்து அங்கிருந்து தப்பித்து சென்று பெற்றோரிடம் விபரத்தைச் சொல்லியிருக்கிறார்.  இதைக்கேட்டு  ஆத்திரம் அடைந்த பெற்றோர்,   உடனடியாக போலீசில் புகார் அளிக்க,  போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றிருக்கிறார்கள்.   அதற்கு மறுக்கவே,   வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கொடுத்து பலர் கூட்டு பாலியல் கொடுமை செய்து இருக்கிறார்கள்.   இதன்பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சிறுமியின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணமான கந்தசாமி என்பவர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதனையடுத்து தனவேல், பாலச்சந்திரன், ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்துள்ளனர்.

இன்னும் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

 வீட்டு வேலைக்காக சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலுக்கு பழக்கப்படுத்தப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.