கணவனை கட்டிப்போட்டு மனைவி கூட்டு பாலியல் கொடுமை

 
h

திருட வந்தவர்கள் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், பணம், நகைகள் இல்லாததால் கணவனை கட்டி போட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

 ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோஹி பகுதியில் வசித்து வருபவர் ஜேதுசிங்(47).   இவர் ஏடிஎம்மில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.   

r

 கடந்த ஒன்பதாம் தேதி அன்று காலையில் வேலைக்குச் சென்று மாலை 5 மணி அளவில் வீடு திரும்பி இருக்கிறார் ஜேதுசிங். அன்று இரவு கணவன் -மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று இருக்கிறார்கள்.   அப்போது நாலு பேர் கொண்ட கும்பல் உதவி கேட்பது போல் வந்து கதவை தட்டி இருக்கிறார்கள்.   யார் என்று கேட்டுக்கொண்டே ஜேதுசிங் கதவை திறந்திருக்கிறார்.

 வீட்டிற்குள் நுழைந்ததும் ஜேதுசிங்கை  கடுமையாக தாக்கியிருக்கிறார்கள்.   அவரிடம் இருந்த 1400 ரூபாயினை முதலில் பறித்துள்ளனர்.  வீடு முழுக்க தேடி பார்த்தும் பணம், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால்  ஆத்திரத்தில் ஜேதுசிங்கின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய  முடிவு எடுத்துள்ளனர். இதை அடுத்து அந்த பெண்ணின் கணவரை கை, கால்களை கட்டி போட்டு விட்டு அவரின் கண் முன்னேயே  அப்பெண்ணை நான்கு பேரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .  பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

சிரோஹி போலீசில் ஜேதுசிங் கொடுத்த புகாரில் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்துள்ளனர்.  தலைமறைவாக இருக்கும் ஒருவரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.