ஆண்களுடன் செல்போனில் அரட்டை! மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவர்

 
r

ஆண்களுடன் செல்போனில் அரட்டை அடிப்பதை பார்த்து ஆத்திரப்பட்ட கணவர் மனைவியை கட்டையால் அடித்து கொன்று விட்டு கட்டிலிலிருந்து விழுந்து அடிபட்டுவிட்டார் என்று  நாடகமாடிய கணவர் போலீசில் சிக்கி இருக்கிறார்.

 சென்னையில் அம்பத்தூர் பகுதியில் நேரு தெருவில் வசித்து வந்தவர் ஹரீஸ் பிரம்மா.   உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த 26 வயது இளைஞர் பீகாரைச் சேர்ந்த ரஷியா கத்துனா என்ற 22 வயது பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.  

 கணவன்-மனைவி இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் சென்னை வந்து அம்பத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். ஹரீஸ் பிரம்மா அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார்.

p

கடந்த 29ம் தேதி அன்று கட்டிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு விட்டதாகச் சொல்லி பலத்த காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.    பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் . இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

 அந்த பிரேத பரிசோதனை முடிவுகள்  வெளியாகி இருக்கிறது.  அதில் கட்டையால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அம்பத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.  

 கடந்த மூன்று மாதங்களாக என் மனைவி வேறு ஆண்களுடன் செல்போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.   இதனால் வந்த ஆத்திரத்தில் தான் அவரை கடுமையாக தாக்கிய பின்னர் எப்போதும் போல் வேலைக்குச் சென்றுவிட்டேன்.   வேலை முடிந்து  மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி சுயநினைவின்றி கிடந்தார்.  இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் விழுந்து காயம் ஏற்பட்டு விட்டதாக மருத்துவமனையில் பொய் சொன்னேன் . ஆனால் பிரேத பரிசோதனையில் உண்மைகள் வெளியாகி விட்டன என்று சொல்லியிருக்கிறார். 

 இந்த விசாரணைக்கு பின்னர் வழக்கை கொலை வழக்காக மாற்றி ஹரிஷ் பிரம்மாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.