புதுப்பெண் கழுத்தை அறுத்து ஓடையில் வீச்சு- திருமணமான 5வது நாளில் நடந்த பயங்கரம்

 
se

திருமணமான ஐந்து நாட்களுக்குள்ளேயே கழுத்து அறுத்து ஓடையில் வீசப்பட்டு உள்ளார் புதுப்பெண்.   கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தென்காசி மாவட்டத்தில் கடையம் அடுத்த துப்பாக்குடி.   இந்த இந்த ஊரில் உள்ள ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்தை அறுக்கப்பட்டு சடலமாக கிடக்கிறார் என்று ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் வந்திருக்கிறது.   போலீசார்  சென்று விசாரணை செய்த போது அந்த சடலம் 23 வயது இளம்பெண் என்பது தெரிய வந்திருக்கிறது.  அவரின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் , கொலையாளி யார்?  கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்?  என்று குறித்து விசாரணை நடத்தி வந்தனர் .

b

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கி முத்து என்பவரின் மகள் இசக்கி செல்வி என்பது தெரிய வந்திருக்கிறது.   இசக்கி செல்விக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் துப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது . ஆனால் திருமணத்திற்கு முன்னதாக இசக்கி செல்வி மாயமாகி இருக்கிறார். 

 பெற்றோர்,  உறவினர்கள் தேடி வந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை அவர் திருமணம் செய்து இருக்கிறார்.  இதற்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

 இந்த நிலையில் இசக்கி செல்வி கணவருடன் கடையம் அருகே உள்ளது கோவிலூத்து பகுதியில் இருக்கும் உறவினர்  வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.   நேற்று முன் தினம் இசக்கி செல்விக்கும் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   இதனால் சண்டை போட்டுக் கொண்டு இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.   மறுநாள் தான் அவர் துப்பாக்குடி ஓடையில் சடலமாக கிடந்துள்ளார் . 

போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில்  செல்வியை இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து  அந்த இளைஞர் யார்?  இசக்கி செல்வி கொலை செய்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.