சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த காதலன்

 
s

சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த காதலனும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மங்கலம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன்.   21 வயதான இந்த இளைஞர் மதுரையை சேர்ந்த  17 வயது சிறுமியை காதலித்து வந்திருக்கிறார்.   கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மேலூர் பகுதியில் கீழவளவு மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.   காதலன் என்பதால் சிவராமனை நம்பி அவருடன் சென்று இருக்கிறார்.

 மலைப்பகுதிக்கு சென்றதும் இருவரும் தனிமையில் இருந்திருக்கிறார்கள்.  அப்போது சிவராமன் சிறுமியுடன் அத்து மீது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதை அங்கு மறைந்து நின்ற சிவராமன் நண்பர்கள் இரண்டு பேர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.  அந்த இரண்டு பேரும் இருவரையும் நெருங்கி சிவராமன் நண்பர் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிறுமியையும் சிவராமனை வீடியோவை காட்டி மிரட்டி இருக்கிறார்கள்.

வ்

 இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என சொல்லி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து இருக்கிறார்கள்.   இதை அடுத்து பயந்து போன அவர்கள்  அணிந்திருந்த முப்பதாயிரம் மதிப்பிலான தங்க நகைகளையும் அந்த நபர்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த சம்பவத்திற்கு பின்னரும் தொடர்ந்து அந்த நபர்கள் இந்த வீடியோவை காட்டி சிறுமியிடம் பணம் பறித்து வந்துள்ளார்கள்.

 குடும்பத்திற்கு பயந்து அந்த சிறுமியும் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்து வந்திருக்கிறார்.  ஆனால் இந்த தொல்லை அதிகரித்துக் கொண்டே போக ,  காதலன் சிவராமன் நடவடிக்கையிலும் சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.   இதனால் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை சொல்லி அழுது இருக்கிறார்.

 பெற்றோர் போலீசில் புகார் அளிக்க,  போலீசார் சிறந்த  மேலவளவு பகுதியைத் தேர்ந்த விஜயகுமார்,  உத்தங்குடியை சேர்ந்த வினோத்குமாரை பிடித்து விசாரித்தனர்.  அப்போதுதான் சிறுமியின் காதலன் சிவராமன் போட்டு கொடுத்த திட்டத்தின் படி தான் இந்த மிரட்டல் நாடகம் அரங்கேறி இருக்கிறது என்பதும் , மிரட்டி பறித்த பணத்தை மூன்று பேரும் பங்கு போட்டுக் கொண்டனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.  

 இதையடுத்து மூன்று பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு  பதிவு செய்து மூன்று பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.