காதலியை 4வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற காதலன்

தனது மதத்திற்கு மாற மறுத்த காதலியை நான்காவது மாடியில் இருந்து பிடித்து தள்ளி கொலை செய்திருக்கிறார் காதலன். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூர சம்பவம். இஸ்லாம் மதத்திற்கு அந்த பெண் மாற மறுத்ததால் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார் அந்த இளைஞர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சோபியான் என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வதென்றால் தனது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிதியிடம் சொல்லி இருக்கிறார் சூபியான்.
நிதி அதற்கு மறுப்பு தெரிவிக்கவும், மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் சூபியான். தொடர்ந்து நிதி மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாகவே நிதி வீட்டிற்குச் சென்று, உடனே இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார்.
சம்பவத்தன்றும் இதையே சூபியான் வற்புறுத்த, அதற்கு நிதி மறுக்க, இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது . அதில் ஆத்திரம் அடைந்த சூபியான் திடீரென்று நிதியை நான்காவது மாடியில் இருந்து பிடித்து தள்ளி இருக்கிறார். இதில் கொடூரமாக உயிரிழந்திருக்கிறார்.
சம்பவம் குறித்து நிதியின் தாயார் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், சூபியான் மீது கொலை முயற்சி, கட்டாய மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.