நெட்பிளிக்ஸில் படம் பார்த்துக்கொண்டே காதலியை 10 மணி நேரமாக 32 துண்டுகளாக வெட்டிய காதலன்

 
sa

நெட்பிளிக்சில் படம் பார்த்துக் கொண்டே , உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்டு, பீர் குடித்துக் கொண்டு இடையிடையே தம் அடித்துக் கொண்டு 10 மணி நேரம் செலவு செய்து காதலியை 32 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.  எதுவும் நடக்காதது  போல் அவர் இயல்பாக இருப்பதால் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி மனநிலையை அறிய முடியும் என்று நினைக்கின்றனர் போலீசார். 

s

டெல்லியில் மெஹ்ரவுளி என்கிற பகுதியில் அப்தாப் அமீன் - ஷ்ரத்தா இருவரும் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.   தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அமீனை  வற்புறுத்தி வந்திருக்கிறார்.   இதில் ஏற்பட்ட சண்டையில் ஷ்ரத்தாவை அமீன் கொலை செய்திருக்கிறார்.   இந்த கொலையை மறைப்பதற்காக ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்திருக்கிறார்.   18 நாட்களாக தினமும் இரண்டு பீஸ்களாக பிரிஜ்ஜில் இருந்து எடுத்துச் சென்று அப்புறப்படுத்தி இருக்கிறார்.

 போலீசார் விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது போலவே,  தான் எதையும் செய்யாத போலவே நடந்து கொள்கிறார் அமீன்.   உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால்தான் அமீனின் உண்மையான மனநிலையை அறிய முடியும் என்கிறார்கள்.   ஷ்ரத்தாவை கொலை  செய்த பின்னர்,  உடலை எப்படி வெட்ட வேண்டும் என்று கூகுளில் படித்து தெரிந்து கொண்டிருக்கிறார்.  அதன் பின்னரே உடலை 35 துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.  இதற்கு 10 மணி நேரம் செலவாகி இருக்கிறது.

sh

 பீர் குடித்துக் கொண்டு , உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டு, நெட்பிளிக்சில் சினிமா பார்த்துக் கொண்டே இடையிடையே தம் அடித்துக் கொண்டு ஒவ்வொரு துண்டுகளாக வெட்டி இருக்கிறார்.    இதனால் 32 துண்டுகளாக வெட்டி முடிக்க பத்து மணி நேரம் ஆகி இருக்கிறது என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.   ஒவ்வொரு உறுப்பையும் வெட்டிய பின்னர் ரத்தக் கசிவு இல்லாமல் தண்ணீரில் நன்றாக அலசி இருக்கிறார்.   கிச்சனில்  மட்டும் ஒரே ஒரு இடத்தில் ரத்தக்கரை இருந்திருக்கிறது . அதை தடயவியல்  அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளார்கள். மேலும்  32 துண்டுகளாக அறுக்க பயன்படுத்திய ரம்பம் ஒன்றும் இருந்துள்ளது. அதையும் போலீசார் மீட்டுள்ளனர்.

அமீனுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் மேற்கொண்டு தெரியவரும் என்று  போலீசார் முடிவு செய்துள்ளனர்.