மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்பிய சிறுவன் - தாய் சைபர் கிரைமில் கண்ணீர்

 
v

11ஆம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி அதை பதிவு செய்துகொண்டு மிரட்டிய சிறுவன்  மீது போக்சோ வழக்கு பாய்ந்திருக்கிறது. அச்சிறுவனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.  

 கோவை அடுத்த கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார் .  இவர் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த போது அவருடன் படித்து வந்த மாணவர் ஒருவர் ஒருவருடன் பழக்கம் இருந்திருக்கிறது.  அந்த மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டிருக்கிறார்.   அதன் பின்னரும்  மாணவியிடம் செல்போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

gg

மாணவியை அவர் காதலிப்பதாகவும் சொல்லி வந்ததால் அதை நம்பிய மாணவியும் அந்த  சிறுவனுடன் பேசி வந்திருக்கிறார்.   செல்போனில் மட்டுமே பேசி வந்தவர்கள் பின்னர் வீடியோ கால் மூலமாகவும் பேசி வந்திருக்கிறார்கள்.   அப்போது ஒரு நாள் வீடியோ காலில் பேசும்போது,  மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் சொல்லி இருக்கிறான் .  உடனே மாணவி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.  

 தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தனது விருப்பத்தை தெரிவித்து வந்திருக்கிறான் அந்த சிறுவன்.   ஒரு கட்டத்தில் அந்த சிறுவனின் நச்சரிப்பு தாங்க முடியாமல் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியிருக்கிறார்.   அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறான் சிறுவன்.   இதை அறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகி வந்திருக்கிறார்.

vv

 ஒருநாள் மீண்டும் அந்த மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசுமாறு சொல்லி இருக்கிறான்.   அதற்கு மாணவி இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் நிர்வாணமாக வரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் .  இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர் ,  அன்றைக்கு நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.   இப்போது உடனே வீடியோ காலில் நிர்வாணமாக வரவில்லை என்றால் அந்தக் காட்சிகளை பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறான் சிறுவன்.

 பொய் சொல்கிறான் என்று நினைத்து  அலட்சியப்படுத்தி விட்டார்  அந்த மாணவி.  ஆனால் அடுத்த நிமிடம் அந்த மாணவியின் செல்போனுக்கு அரை நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை சிறுவன் அனுப்பி வைத்திருக்கிறான். இதை பார்த்த அந்த மாணவி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   இதற்கு மேலும் யாரிடமும் சொல்லாமல் இருந்தால்  பிரச்சனை அதிகமாகிவிடும் என்று என நினைத்த அந்த மாணவி தன் தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதைக் கேட்டு பதறி துடித்த அந்த தாய் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் அந்த சிறுவன் யார் ?எந்த ஊர் என்பது குறித்து விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள் .  அந்த மாணவன் மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடி வருகின்றனர்.