கொட்டும் மழையில் வெடிகுண்டுகள் வீசி ரவுடி படுகொலை

 
v

கொட்டும் மழையில் வெடிகுண்டுகள் வீசி அதன் பின்னர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இதனால் சண்முகாபுரம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.  24 வயதான இந்த இளைஞர் அப்பகுதியில் பிரபல ரவுடி.  அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.   இந்த நிலையில்  நேற்று இரவில் சக்தி என்பவருடன் தனது வீட்டில் மது குடித்து கொண்டு இருந்திருக்கிறார்.  இரவு பத்து மணிக்கு மேல் பலத்த மழை பெய்திருக்கிறது. 

a

அப்போது பைக்கில் வந்த ஒரு கும்பல் பன்னீர்செல்வம் வீட்டிற்குள் நுழைய,  இதைப்பார்த்ததும் தப்பித்து ஓட முயற்சித்து இருக்கிறார்கள் . ஆனால் அதற்குள் அடுத்தடுத்து இரண்டு நாட்டு வெடி குண்டுகளை அந்த கும்பல் வீசி இருக்கிறது.   பயங்கர சத்தத்துடன் அந்த குண்டுகள் வெடித்திருக்கின்றன.   இதில் வீடு மற்றும் அந்த வீட்டை சுற்றி உள்ள பகுதியில் மிகவும் புகை மண்டலமாக மாறி இருக்கிறது .

இதனால் சக்தியும் பன்னீர்செல்வமும் தப்பித்து போக முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.   உடனே அந்த கும்பல் சக்தியையும்  பன்னீர்செல்வத்தையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்திவிட்டு ஓடியிருக்கிறது.   

சம்பவம் இடத்திற்கு போலீஸ் சென்று இருவரையும் மீட்டு  ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.  அங்கு பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.    உயிருக்கு  ஆபத்தான நிலையும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் . 

முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கிறதா? இல்லை வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த படுகொலை சம்பவத்தால் சண்முகபுரம் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.