கிளப் ஹவுஸ் தோழிகளுடன் பைக் சவாரி! கஞ்சா போதையில் நேர்ந்த துயரம்

 
ச்

 கஞ்சா போதையில் இரண்டு தோழிகளுடன் பைக் சவாரி செய்த இளைஞரால் அந்த துயரம் நேர்ந்திருக்கிறது.  ஒரு தோழி உயிரிழந்திருக்கிறார். சென்னை அடையாறில் இந்த துயரம் நிகழ்ந்திருக்கிறது.

சென்னை  விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்(25).   இவர் இன்று அதிகாலையில் தனது தோழிகள் திருச்சியை சேர்ந்த தமிழரசி(22), திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐஸ்வர்யா(22) ஆகிய 2 பேரையும் பைக்கில் அழைத்துக் கொண்டு அடையாற்றின் பாலத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

ச்ல்

 ஒரே பைக்கில் 3 பேரும் சென்றதால் அதிவேகமாக சென்றதால் அடையாறு ஆற்றுப்பாலத்தில் கடைசியில் இருந்த ஸ்பீடு பிரேக்கர் மீது வேகமாக ஏறிய போது முன்னால் சென்ற சரக்கு ஆட்டோ மீது பைக் மோதியது.   இதில் பின்னால் அமர்ந்திருந்த தமிழரசி சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். பிரவீனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிடந்திருக்கிறார்கள்.

 அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  தமிழரசியின் உடல் ராயப்பேட்டையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 விசாரணையில் பைக்கை ஓட்டி வந்த பிரவீனிடம் கஞ்சா இருந்தது தெரியவந்திருக்கிறது.  ‘கிளப் ஹவுஸ்’ மூலம் தமிழரசி ஐஸ்வர்யாவுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  தனது தோழிகளுடன் இவர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்குச் சென்று கஞ்சா புகைத்து விட்டு கஞ்சா போதையிலேயே பைக்கில் வேகமாக வந்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது  என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.