ஆபாச படங்களை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து சேமித்து வைத்த ஆட்டோ டிரைவர்

 
v

வீடியோ காலில் பேசும்போது இந்த இளம்பெண்ணின் ஆபாச படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சேமித்து வைத்த ஆட்டோ டிரைவர் அதை காட்டி மிரட்டி பாலியல் உறவுக்கு அழைத்து இருக்கிறார்.   சைபர் கிரைம் போலீசார் இதை கண்டறிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் மூணாறு.   இப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது25)ஆட்டோ டிரைவராக இருந்து வந்துள்ளார்.   சந்தோஷுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது  இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   இருவருக்குமிடையே நாளடைவில் நெருக்கம் அதிகமாகி இருக்கிறது.
 அந்த பெண்ணை  தீவிரமாக சந்தோஷ் காதலிப்பதாக சொல்லி இருக்கிறார். 

gf

 இதனால் வாட்ஸப்பில் சாட்டிங் செய்தும்,  வீடியோ காலிலிலும் இருவரும் பேசி வந்திருக்கிறார்கள்.    வீடியோ காலில் பேசும் போது  அந்த இளம் பெண்ணை ஏமாற்றி அவரின் ஆபாச படங்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சேமித்து வைத்திருக்கிறார்.  சேமித்து வைத்திருந்த அந்தப் பெண்ணின் படங்களை அவருக்கே அனுப்பி தன்னுடன் பாலியல் உறவு வைக்க வேண்டும் என்று சொல்லி மிரட்டியிருக்கிறார்.

அதற்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை என்றதும் இந்த படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். உண்மையாக காதலித்து வந்த அந்த பெண்,   தான் காதலித்த நபர் உண்மையானவர் இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த அந்த பெண் மூணாறு போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஆட்டோ டிரைவர் சந்தோசை கைது செய்துள்ளனர்.   அவரின் செல்போனில் ஆய்வு செய்தபோது அந்த இளம் பெண்ணின் வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன.  சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த வீடியோக்களை மீட்டிருக்கிறார்கள்.  அதன் பின்னர் விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் சந்தோஷ்.   இதையடுத்து தேவிகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி சிறையில் தொடுபுழா சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார்.