அந்தரங்க விஷயத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட ஆட்டோ டிரைவர்! காதலியையும் மிரட்டி பகிர்ந்துகொண்ட கொடூரம்

 
a

காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அந்த இளைஞர்.   அதைக் கேட்டதும் தாங்களும் அது போல் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நண்பனிடம் சொல்ல வழக்கம் போல் தனியாக சந்திக்கலாம் என்று காதலியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு திட்டமிட்டபடி நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் அந்த இளைஞர்.  போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

 விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அருகே வீரணாமூர் கிராமம்.   அக்கிராமத்தைச் சேர்ந்த சிம்பு என்கிற 19 வயது இளைஞர் ஆட்டோ டிரைவராக உள்ளார்.  சந்தை மேடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு திண்டிவனம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.  அவரை காதலித்து வந்திருக்கிறார் .   திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அச்சிறுமி உடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார்.  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

b

 இந்த அந்தரங்க விஷயத்தை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் சிம்பு.   இதைக் கேட்ட பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த சிவா,  செல்வம் ஆகியோர் தாங்களும் அது போல் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று நண்பனிடம் விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.  நண்பர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்று சொல்லி நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு ,  வழக்கம் போல் தனியாக சந்திக்கலாம் என்று சொல்லி சிறுமியை தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று இருக்கிறார் சிம்பு.

செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரா கார்டன் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு காதலியை அழைத்துச் சென்றிருக்கிறார்.   அங்கு சென்றதும் சிம்புவின் நண்பர்கள் சிவாவும், செல்வமும் இருந்திருக்கிறார்கள்.  இதை பார்த்து அச்சிறுமி அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   மூன்று பேரும் சேர்ந்து அந்த சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.   அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த அந்த சிறுமி பெற்றோரிடம் சொல்லி அழுது இருக்கிறார். 

திண்டிவனம் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று காலையில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.   புகாரின் பேரில் சிம்பு, செல்வம், சிவா மூன்று பேர் மீது போக்சோ, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் . பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.