நண்பரின் மனைவியுடன் ஓடிப்போனவர் மீண்டும் ஊருக்குள் வந்ததால் நேர்ந்த கதி

 
k

நண்பரின் மனைவியுடன் ஓடிப்போனவர் மீண்டும் ஊருக்குள் வந்ததால், ஆத்திரம் அடைந்த நண்பரும் அவரது உறவினர்களும் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

s

வாழப்பாடியில் வசித்து வருபவர் வெற்றி(25).  கறி வியாபாரியான இவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த கறி வியாபாரியான 30 வயது வாலிபருக்கும் பழக்கம் இருந்துள்ளது.  இருவரும் நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர்.

இருவருமே திருமணமானவர்கள்.  வெற்றிக்கு ஒரு ஆண் குழந்தையும்,  அந்த வாலிபருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இருவரும் நண்பர்களாக இருந்ததால் அடிக்கடி  அவரவர் வீட்டுக்கு சென்று வந்திருக்கிறார்கள். இதில் அந்த வாலிபரின் 20 வயது மனைவியுடன் வெற்றிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   இதில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆனால் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பதற்கு இடையூறுகள் இருந்ததால்,  இருவரும் ஊரை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள்.

b

 அதன்படி கடந்த எட்டாம் தேதி அன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊரை விட்டும் வெளியேறி சென்றிருக்கிறார்கள்.   இதனால் வெற்றி மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்திருக்கிறார் அந்த வாலிபர்.  இந்த நிலையில் திடீரென்று தனது மனைவியுடன் வெற்றி அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார்.  இதை தெரிந்து கொண்ட வாலிபர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஓடியதோடு அல்லாமல்,  மீண்டும் அழைத்துக் கொண்டு இதே ஏரியாவிற்கு வந்திருக்கிறாரனே என்ற ஆத்திரத்தில் அடியாட்களுடன் சென்று வெற்றியை கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.  

 இதில் படுகாயம் அடைந்த வெற்றியை வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   வெற்றியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.  பின்னர் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.