நான்கு பேர் சேர்ந்து நாசம் செய்தது போதாதென்று பைக்கை ஏற்றி அப்பெண்ணின் காலை உடைத்த கொடூரம்

 
rap

நான்கு பேர் சேர்ந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக போதை மருந்து கலந்த மதுபானம் குடிக்க வைத்து கூட்டி பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அப் பெண்ணின் காலில் பைக்கை ஏற்றி எலும்பை உடைத்து  சித்திரவதை செய்திருக்கிறார்கள்.   அதன் பின்னர் ஒரு புதரில் பெண்ணை தூக்கி வீசி விட்டு சென்றிருக்கிறார்கள்.  மயக்கம் தெளிந்து பலத்த காயங்களுடன் அப்பெண் போட்ட சத்தத்தில் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சையில் சேதமடைந்த அப்பெண்ணின் ஒரு கால் துண்டிக்கப்பட்டிருக்கிறது.  உத்தரப்பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

h

 சம்பவத்தன்று கோசிகலா கிராமத்தை  சேர்ந்த 30 வயதுடைய அந்த இளம்பெண், வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பி இருக்கிறார் . வீட்டிற்கு செல்வதற்காக ஒரு டெம்போ ஸ்டாண்டில் வாகனத்திற்காக காத்திருந்திருக்கிறார்.   அப்போது அந்தப் பெண் வசித்து வரும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கில் வந்திருக்கிறார்.   அவர் தனது பைக்கில் ஏறிக்கொள்மாறு கேட்டு இருக்கிறார்.  அந்த பெண் பரவாயில்லை என்று மறுக்க,  இல்லை ஏறிக்கொள்ளுங்கள் வீட்டில் கொண்டு போய் விடுகின்றேன் என்று சொல்லி இருக்கிறார். 

 நம்ம ஊரு பையன் தானே என்று அந்த பெண்ணும் பைக்கில் ஏறி இருக்கின்றார் .  நெடுந்தோறும் சென்றதும் அந்த இளைஞன் கூட்டாளிகள் மூன்று பேர் வந்திருக்கிறார்கள்.   அப்போது வழியில் நான்கு பேரும் பைக்கை நிறுத்தி விட்டு  அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக போதை கலந்த மதுபானம் குடிக்க வைத்து இருக்கிறார்கள்.  

 பின்னர் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.  அத்தோடு அவர்களின் வெறி தீரவில்லை.  மயங்கிய நிலையில் கிடந்த அந்தப் பெண்ணின் காலில் பைக்கை ஏற்றி சித்திரவதை செய்திருக்கிறார்கள்.   அதன் பின்னர் அந்த பெண்ணை தூக்கி ஒரு புதருக்குள் வீசிவிட்டு பைக்கில் பறந்திருக்கிறார்கள்.

யநினைவு திரும்பிய பின்னர் அந்தப் பெண் போட்ட சத்தத்தில் அப்பகுதியாக சென்றவர்கள் ஓடி வந்து அப்பெண்ணை  மீட்டு கோசிகலாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு போய் விட்டிருக்கிறார்கள்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று இருக்கிறார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியானாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.  சிகிச்சையில் அதிக பாதிப்படைந்ததால் அப்பெண்ணின் ஒரு கால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.   பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த இளைஞர் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர்.  தப்பி ஓடிய ஒருவரை பிடிக்க தேடி வருகின்றனர்.