படுத்திருந்த சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்த முதியவர்

 
li

வீட்டில்  படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை கட்டிப்பிடித்து உதட்டை கடித்து காயப்படுத்திய முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 கேரள மாநிலத்தில் கண்ணூர் மாவட்டம்.   அம் மாவட்டத்தில் தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மம்முட்டி.  76 வயதான இந்த முதியவர் மாகி பிராந்தியத்தில் உள்ள பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்திருக்கிறது. 

old

 அப்படித்தான் சம்பவத்தன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.  அப்போது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை அந்த முதியவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உதட்டை கடித்து இருக்கிறார்.   இதில் சிறுவன் தூக்கத்தில் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்திருக்கிறான்.

 முதியவர் கடித்ததில் உதட்டில் காயம்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது.   உடனே ஓடிச் சென்று தன் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறான்.  பெற்றோர்  மகனின் உதட்டில் காயம்பட்டு ரத்தம் வழிந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.   உடனே அவர்கள் பள்ளூர் காவல் நிலையத்திற்குச் சென்று மம்முட்டி மீது புகார் கொடுத்துள்ளனர்.

 போலீசார் மம்முட்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவினை அடுத்து மாகி சிறையில் அடைத்துள்ளனர்.

 76 வயதான முதியவர் ஒருவர் சிறுவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உதட்டை கடித்து காயப்படுத்திய சம்பவம் பள்ளுர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.