போராடிய பெண்கள் மீது மண் அள்ளி போட்டு உயிருடன் புதைத்து கொல்ல முயற்சி

 
m

நீதி கேட்டு போராடிய இரண்டு பெண்களை மண்ணை அள்ளி போட்டு உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது.  இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தினையையும் ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டம்.  அம்மாவட்டத்தில் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தாலம்மா,  சாவித்திரி . ஆகியோரின் வீட்டு மனைகளை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராவ், ராமராவ், பிரகாஷ்ராவ்  என்ற மூன்று பேரும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்க. ள் இந்த வீட்டு மனையை  திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரி இரண்டு பெண்களும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

sr

 இந்த நிலையில் இன்று வீட்டுமனையை ஒப்படைக்க கேட்டு அந்த மூன்று பெண்களும் போராட்டம் நடத்தினர்.  இதை கேள்விப்பட்டு  அப்பகுதிக்கு வந்த ராமராவ், ஆனந்த ராவ், பிரகாஷ் ராவ் 3 பேரும் டிராக்டர்கள் மூலம் மண்ணை அள்ளி தள்ளி அந்த பெண்கள்  மீது கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்கள்.

 இதை கண்டு பதறிய அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இரண்டு பெண்களையும் மீட்டு  இருக்கிறார்கள்.  இதைக் கவனித்த அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று இரண்டு பெண்களையும் மீட்டுள்ளனர்.

 இது பற்றிய தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.