உங்கள் பாலியல் தேவைகளுக்கு அணுகவும்.. பக்கத்து வீட்டு பெண் நம்பரை பேஸ்புக்கில் பகிர்ந்த இளைஞர்

 
gg

 உங்கள் பாலியல் தேவைகளுக்கு அணுகவும் என்று பக்கத்து வீட்டு பெண் நம்பரை பேஸ்புக்கில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள் அந்த இளைஞர் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 சென்னையில் அந்த பெண் சுய தொழில் செய்து கணவர் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.  அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி அன்று  தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.  அன்றிலிருந்து ஆபாச குறுஞ்செய்தி,  ஆபாச புகைப்படங்கள்,  ஆபாச வீடியோக்கள் அனுப்பி வந்திருக்கிறார்.  தன்னுடன் உறவுக்கு வருமாறு அழைத்திருக்கிறார்.

v

 அதற்கு அந்தப் பெண் மருத்து கடுமையாக திட்டியதை அடுத்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து,  உங்கள் பாலியல் தேவைக்கு தொடர்பு கொள்ளவும் என்று பகிர்ந்திருக்கிறார்.   இதை அடுத்து அந்த பெண்ணுக்கு பலரும் செல்போனில் அழைத்து உறவுக்கு அழைத்திருக்கிறார்கள் . இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அந்த பெண். 

இதை அடுத்து தி.  நகரில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி அன்று புகார் கொடுத்திருக்கிறார் அந்த பெண்.   மேலும்,  சைபர் கிரைம் பிரிவிலும்,    எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார் .   இந்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் செல்போன் எண், பேஸ்புக் கணக்கை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

 விசாரணையில் அந்தப் பெண் வாழும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தான் இந்த செயலை செய்தது தெரிய வந்திருக்கிறது.   வீட்டில் பதுங்கி இருந்த ராஜேஷை நேற்று மாலையில் எம்ஜிஆர் நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.   பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

அந்தப்பெண்ணின் மீது ஏற்பட்ட சபலத்தால் அந்த இளைஞர் இந்த செயலைச் செய்தது  விசாரணையில் தெரியவந்திருக்கிறது.