டெல்லியில் இளம்பெண் 35 துண்டுகளாக கொலை!!

 
murder

மும்பை சேர்ந்த ஷ்ரத்தா எனும் இளம்பெண் 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள மொஹாலி குடியிருப்பு 35 துண்டுகளாக காதலரால் வெட்டப்பட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டது.

இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வர சமீப நாட்களாக போலீசார் ஷ்ரத்தா உடலின் எச்சங்களை, அவரது காதலன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தேடி வருகின்றனர். இதனிடையே இன்று டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், மொஹராலி காட்டு பகுதியில் இருந்து மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை பகுதி, வெட்டப்பட்ட எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவை ஷ்ரத்தா எலும்புகள் தானா? என உறுதி படுத்த , ஷ்ரத்தாவின் தந்தை மரபணு மாதிரியுடன் கண்டறியப்பட்ட எலும்புகளின் டி.என்.ஏ ஒத்து போகிறதா? என கண்டறிய DNA சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஏற்கனவே 8-10 சிறிய எலும்புகளை காவல்துறை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.