சரிந்து விழுந்த குடல் பாகங்களை கையில் பிடித்தபடி ஓடிய வாலிபர்

 
க்

கத்தியால் குத்தப்பட்டதும் சரிந்து விழுந்த குடல் பாகங்களை கையில் அள்ளிப் பிடித்துபடி மருத்துவமனைக்கு ஓடி இருக்கிறார் வாலிபர்.  இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் டோம்பிவிலி என்கிற பகுதியில் ஹர்ஷத் ரசால் என்கிற 30 வயது வாலிபர் தனது மாமாவுடன் மினி பேருந்து ஓட்டி சென்று இருக்கிறார். அப்போது முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மினி பேருந்து பேருந்து மோதி இருக்கிறது. 

k

 இதனால் அந்த வாகனத்தை ஒட்டி வந்த பண்டித் மாத்ரே என்பவர் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வந்து ஹர்ஷல் ரசாலிடம்  சத்தம் போட்டு இருக்கிறார்.  இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது .   இதை பார்த்த ஹர்சத் மாமா இருவரைக்கும் இடையேயான தகராறை விலக்கி விட்டு  நின்று இருக்கிறார்.

 அப்போது பண்டித் மாத்ரேயின் கூட்டாளிகள் அங்கே ஓடி வந்திருக்கிறார்கள்.   அவர்கள் அனைவரும் சேர்ந்து ஹர்ஷத்தையும்,  அவரது மாமாவையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள்.   அப்போது பண்டிட் மாத்ரே தான் வைத்திருந்த கத்தியால் ஹர்ஷத் ராசாலின்  வயிற்றில் ஆவேசமாக குத்தி இருக்கிறார் .   இதில் ரத்தம் பீறிட்டு குடல் சரிந்து விழுந்து இருக்கிறது.

 இதை பார்த்ததும் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.   உடனே ஹர்ஷத் ரசால்,   சரிந்து விழுந்த குடல் பாகங்களை கையில் அள்ளிப் பிடித்த படியே வலியால் அலறி துடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தபடியே மருத்துவமனை நோக்கி ஓடி இருக்கிறார்.    மருத்துவமனைக்குச் சென்ற அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.   போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பண்டித் மாத்ரேயை கைது செய்துள்ளனர்.