அப்பளம் பொறித்து தரச்சொன்னதால் ஆத்திரம்! கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

 
h

சாப்பிடும் போது சீக்கிரத்தில் அப்பளம் பொறித்து தராததால் ஆத்திரப்பட்டு மனைவியை திட்டியதால் பதிலுக்கு மனைவி ஆத்திரப்பட்டு கொதிக்கும் எண்ணையை எடுத்து கணவன்  மேல் ஊற்றி இருக்கிறார்.  இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் மனைவிக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு கால சிறை தண்டனையை குறைத்துள்ளது சென்னை இது உயர் நீதிமன்றம்.

 கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத்.   இவரது மனைவி ஆயிஷா.  தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவில் சாப்பிடும் போது சாப்பாட்டுக்கு அப்பளம் கேட்டிருக்கிறார் அப்துல்.  அதற்கு தாமதமாக அப்பளம் பொறித்துக் கொடுத்திருக்கிறார் ஆயிஷா .  இதனால் ஆத்திரப்பட்ட அப்துல் இவ்வளவு நேரம் ஏன் என்று சத்தம் போட்டு இருக்கிறார் .  இதில் ஆத்திரமடைந்த ஆயிஷா கொதிக்கும் எண்ணையை எடுத்து அப்துல் மேல் ஊற்றி இருக்கிறார்.   இதில்  அலறி துடித்த அப்துல்லாவை  அப்பகுதியினர்  மீட்டு அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

f

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அப்துல்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   இது குறித்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயிஷாவை ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.  அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. ஆயிஷா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். 

 இந்த வழக்கில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை என்பதாலும்,  உயிரிழந்தவரின் உறவினர்கள் அளித்த சாட்சி அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.   மேலும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அப்துல்லாவிடம் போலீசார் வாக்குமூலம் பெறவில்லை என்றும்,   பிரேத பரிசோதனை தவிர வேறு எந்த மருத்துவ ஆவணங்களும் தாக்கல் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

 அதுமட்டுமல்லாமல் சம்பவம் நடந்து 28 நாட்களுக்கு பின்னரே அப்துல்லா உயிர் இழந்துள்ளதால் சிகிச்சை குறைபாடு உள்ளிட்ட வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம் என்பதால் மனைவி ஏற்கெனவே அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது என்று சொல்லி கீழமை நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை குறைத்து  தீர்ப்பளித்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.