கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி

 
ம்m

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மண்வெட்டியால் வெட்டி கணவரை படுகொலை செய்து இருக்கிறார் மனைவி.  மதுரை மாவட்டத்தில் மேலூர் அடுத்த அருக்கம்பட்டி கிராமத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 அருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(52).  இவரது மனைவி பாண்டியம்மாள்(45).  இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.  ரவி விவசாய வேலைகள் பார்த்து வந்திருக்கிறார்.   கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரவிக்கும் பாண்டியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது .   இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் . 

அ

திருப்பூரில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் ரவி.   கணவரை பிரிந்து வேலூரில் தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் பூ வியாபாரம் செய்து வந்திருக்கிறார்.   அப்போது அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்ற வாலிபருடன்  பாண்டியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  பின்னர் இது கள்ள உறவாக மாறி இருக்கிறது .

இந்த விவகாரம் ரவிக்கு தெரிய வந்ததும் அவர் பலமுறை ஊருக்கு வந்து மனைவியை கண்டித்து இருக்கிறார் .  ஆனால் பாண்டியம்மாள் அதை பொருட்படுத்தவே இல்லை.   கள்ளக்காதலை தொடர்ந்து வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் ஊர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார் ரவி.   அவர் ஊருக்கு வந்ததுமே தன் கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் கணவரை கொன்று விடலாம் என்று கள்ளக்காதலுடன் சேர்ந்து பாண்டியம்மாள் முடிவெடுத்து இருக்கிறார்.

அதன்படி அருக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார் ரவி.   அப்போது கள்ளக்காதன் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து மண்வெட்டியால் கொடூரமாக வெட்டி கணவர் ரவியை கொலை செய்திருக்கிறார் பாண்டியம்மாள்.   பின்னர் ஒன்றும் தெரியாதவர்கள் போல் அவர் தன் வீட்டில் சென்று இருந்துள்ளார் பாண்டியம்மாள்.

 போலீசார் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு ரவியின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போது,   அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவலை அடுத்து பாண்டியம்மாள் மீது போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது .  அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி  விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டி விட்டதாக சொல்லி இருக்கிறார்.

 இதை அடுத்து பாண்டியம்மாளையும்,  அவரது கள்ளக்காதலன் குமார் மற்றும் கொலைக்கு உதவிய அவரது நண்பர் பிச்சைக்கனி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.