தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி

 
ஒஇல்

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உறவு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார் மனைவி.  தெலுங்கானா மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

  தெலுங்கானா மாநிலத்தில் விஜயவாடாவில் வசித்து வந்தவர் கிரிதர்.   இவருக்கு ரேணுபா என்ற மனைவியும்,  மூன்று பிள்ளைகளும் உள்ளனர் .   கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார் கிரிதர்.   தனது வருமானம் குடும்பத்தை நடத்த போதவில்லை என்பதால்,   பிள்ளைகளின் படிப்பு எதிர்காலம் கருதி விஜயவாடாவில் இருந்து குடிமல் கபூருக்கு குடிபெயர்ந்திருக்கிறார் கிரிதர்.   அங்கு வசித்து வந்த போது வேறொரு பெண்ணுடன் கிரிதருக்கு கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது.  

க்க்

 இதை தெரிந்து கொண்ட மனைவியை ரேணுபா,  கணவருடன் சண்டை போட்டு இருக்கிறார்.   கள்ள உறவை விட்டு விடும்படி கேட்டு இருக்கிறார்.  இதனால் இருவருக்கும் இடையே தகராறு நடந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்கள் முன்பு இங்கிருந்து தரியா பாக் என்கிற பகுதிக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.   இடம் மாறிவிட்டால் தன் கணவர் கள்ள உறவை விட்டு விடுவார் என்று நினைத்திருக்கிறார் ரேணுபா.  ஆனால் வேறு பகுதிக்கு இடம் மாறினாலும் அந்த பெண்ணுடன் கள்ள உறவை தொடர்ந்து வந்திருக்கிறார் கிரிதர்.  

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் ரேணுபா. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வேலைக்கு சென்று விட்டு காலையில் 11:00 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் கிரிதர்.   கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று விட்டு தான் இங்கே வந்து தூங்குகிறார் என்று ஆத்திரப்பட்ட மனைவி ரேணுபா, கொதிக்கும் எண்ணையை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது ஊற்றி இருக்கிறார் .  இதில் அலறி துடித்து இருக்கிறார் கிரிதர்.   

அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.   தகவல் அறிந்த போலீசார் வழக்கு  பதிவு செய்து கிரிதர் மற்றும் அவரது மனைவி ரேணுபாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.