பாலியல் விரக்தியில் சிறுவர்களை குறிவைத்து இச்சைக்கு ஆளாக்கிய வார்டன்

 
x

 சிறுவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய பள்ளி விடுதி வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தெலுங்கானா மாநிலத்தில் ஹயாத் நகர் பகுதியில் இயங்கி வருகிறது ஸ்ரீ சைதன்யா என்கிற பள்ளி .  அந்த பள்ளியில் முர்ராம் கிருஷ்ணா என்ற 35 வயது வாலிபர் விடுதி வார்டனாக பணிபுரிந்து வந்திருக்கிறார் .   இவர் அந்த விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த ஏழு சிறுவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருக்கிறார்.  இந்த வார்டனுக்கு திருமணம் ஆகாததால்  பாலியல் விரக்தியில் இருந்த கிருஷ்ணா மைனர் சிறுவர்களை மட்டுமே குறிவைத்து அவர்களை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வந்திருக்கிறார்.

zz

 பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பெற்றோர்களிடம் சொல்ல,   அந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு தகராறு செய்ய உடனே ஹயாத் நகர் காவல் நிலையத்திற்கு சென்று  கிருஷ்ணா மீது புகார் சென்றிருக்கிறது.

 இதை அடுத்து போலீசார் கிருஷ்ணா மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.   அவரிடம் நடத்திய விசாரணையில் பல மாணவர்களிடம் இது போன்று பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இதை அடுத்து அவர் மீது வேண்டுமென்றே அமைதியை சீர்குலைத்தல் 504,  குற்றவியல் மிரட்டல் 506 உட்பட மற்ற பிரிவுகளின் மேலும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.