பிச்சைக்காரர் போல் சென்று கட்சி நிர்வாகியை வெட்டி சாய்த்த வாலிபர் - வைரலாகும் வீடியோ

 
ka

பிச்சைக்காரர் வேடமிட்டு பிச்சை கேட்பது போல் சென்று யாசகம் வழங்கும் போது மறைத்து வைத்திருந்த அரிவாள் எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடுகிறார் அந்த வாலிபர்.   இந்த வீடியோ ஆந்திராவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

kaki

 ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி என்கிற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர். பி சேஷகிரி ராவ் வசித்து வருகிறார்.  அவர் வீட்டு வீட்டிற்கு பிச்சைக்காரர் போல் வேடமிட்ட ஒருவர் வந்து யாசகம் கேட்டிருக்கிறார்.   உடனே சேஷகிரி ராவ் அவருக்கு யாசகம் வழங்கி இருக்கிறார்.   யாசகம் வாங்குவது போல் வாங்கிக் கொண்டிருந்த அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சேஷகிரி ராவை வெட்டுகிறார்.

அவர் தப்பி ஓட முயற்சிக்கும் போது,  அவரை சரமாரியாக வெட்ட தடுமாறி கீழே விழுந்து கதறி துடிக்கிறார்.  சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வருகிறார்கள்.   ஆனால் அதற்குள் அந்த பிச்சைக்கார வாலிபர் தப்பி ஓடி பைக்கில் பறந்து விடுகிறார் .

 உடல் முழுவதும் வெட்டுப்பட்டு பலத்த காயம் அடைந்த சேஷகிரி ராவ்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றார்கள்.

 சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருவதால் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகருக்கு நேர்ந்த இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.