காதலியின் இரண்டு மகன்களுக்கும் விஷம் கலந்த கூல்டிரிங்ஸ் கொடுத்த வாலிபர்

 
st

உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் இரண்டு மகன்களுக்கு  விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து உயிரிழந்திருக்கிறார் வாலிபர்.  சென்னையில் கொருக்குப்பேட்டையில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

 கொருக்குப்பேட்டையில் பாரதி நகரில் குடிசை மாற்று வாரியம்  இருப்பில் வசித்து வருகிறார் கவிதா(32).   இவரின் கணவர் ரசூல்.   இவர்களுக்கு இரண்டு மகன்கள். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரசூல் பிரிந்து சென்றிருக்கிறார்.   கவிதா தனது மகன்களுடன் வசித்து வந்திருக்கிறார்.

 இந்த நிலையில் நேற்று கவிதாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு இருக்கிறது.  அக்கம் பக்கத்தினர் சத்தத்தை கேட்டு உள்ளே ஓடிய போது கவிதாவின் இரண்டு மகன்களும் 35 வயது வாலிபரும் மயங்கி கிடந்திருக்கிறார்கள்.   உடனே கவிதாவுக்கும் போலீசுக்கும் அக்கம் பக்கத்தினர் தகவல் சொல்ல,  போலீசார் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொண்டு போய் சேர்த்துள்ளனர் .

y

சிகிச்சை பலனின்றி வாலிபர் ராஜேஷ் உயிரிழந்து உள்ளார்.   சிறுவர்கள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.   

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .   போலீசார்வின் விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் இரண்டு மகன்களையும் விஷம் வைத்து கொல்ல முயன்றிருக்கிறார் காதலன்.   ஆனால் அவரும் ஏன்  இந்த விஷயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 வடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(35).   இவருக்கும் கவிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது.   அடிக்கடி கவிதா வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் ராஜேஷ்.    கவிதாவின் மகன்கள் வளர வளர அவர்களுக்கு ராஜேஷ் வீட்டிற்கு வந்து போவது பிடிக்கவில்லை.   அதனால் அவர்கள் கவிதாவிடம் சொல்ல,   வேறு வழியில்லாமல் கள்ளக்காதலுக்கு தடை போட்டு இருக்கிறார் கவிதா.

 ராஜேஷை இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ் தனது கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பதால் கவிதாவின் மகன்களை கொன்று விட முடிவெடுத்து இருக்கிறார்.   அதன்படி கூல்டிரிங்ஸ் வாங்கி அதில் விஷத்தை கலந்து வைத்திருந்துள்ளார்.  வீட்டில் கவிதா இல்லாத நேரத்தில் அவரின் மகன்களுக்கு கூல்ட்ரிங்ஸ் கொடுத்து இருக்கிறார்.    விசம் கலந்தது என்பதை  அறியாத சிறுவர்கள் அதை குடித்திருக்கிறார்கள்.  ஆனால் இதில் அந்த வாலிபர் ராஜேஷ் அந்த குளிர்பானத்தை ஏன் குடித்தார்  என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.