அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர்

 
s

அரசுப் பள்ளியில் ஆபாச பாடம் நடத்திய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதியில் இயங்கி வருகிறது அந்த அரசு மேல்நிலைப் பள்ளி.   அப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்கும் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.  

 இந்த பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பிற்கு அக்கவுண்டன்சி பாடம் எடுத்து வந்துள்ளார் ஆசிரியர் கிறிஸ்துதாஸ்.   இவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.   மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவிக்க சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.   ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையிலும் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது.

t

 இதை அடுத்து கடந்த ஆறாம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவிகளின் பெற்றோர்களும் உறவினர்களும் பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வாக்குவாதம் செய்துள்ளனர்.   இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

 இதை அடுத்து தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி பெருமாளிடம் புகார் ஒரு செல்ல,  அவர் நேரில் வந்து ஆசிரியர் கிறிஸ்துதாசிடம் விசாரணை நடத்தி இருக்கிறார். அப்படியும்  ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்று இருக்கிறார் .  

இதன்பின்னர் நேற்று மாணவர்களும் பெற்றோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்று திரண்டு சென்று புகார் அளித்துள்ளனர்.   இதை அடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.