மந்திரவாதி ரத்தம் கேட்டதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

 
si

 திருமணத்தடை நீங்க வேண்டும் என்றால் கன்னிப் பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று மந்திரவாதி கேட்க,  அந்த பள்ளி ஆசிரியர் தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு சிறுமியின் பெற்றோர் மட்டும் அல்லாது போலீசாரே ஆடிப் போயிருக்கிறார்கள்.

 மேற்கு வங்க மாநிலத்தில் பங்குரா என்கிற பகுதியில் இயங்கி வருகிறது அந்த தனியார் பள்ளி.   இந்த பள்ளியில் 37 வயது  ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இன்னமும் திருமணமாகவில்லை.   இவர் தனக்கு திருமணமாக வேண்டும் என்பதற்காக கோயில் கோவிலாக அலைந்து இருக்கிறார்.  ஜாதகம், ஜோதிடம் பார்த்து வந்திருக்கிறார்.

g

 அப்போது ஆசிரியருக்கு தெரிந்த ஒருவர் மூலமாக அந்த போலி மந்திரவாதி அறிமுகமாகி இருக்கிறார்.  அந்த மந்திரவாதி ஆசிரியரின் திருமண தடை நீங்க வேண்டும் என்றால் சிறப்பு பூஜை செய்ய வேண்டும்.   அந்த சிறப்பு பூஜைக்கு கன்னி பெண்ணின் அந்தரங்க உறுப்பின் ரத்தம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். 

கன்னிப்பெண்ணின் ரத்தத்திற்கு என்ன செய்வது என்று யோசித்து ஆசிரியர் வேறு வழி இன்றி,  தான் பணியாற்றும் பள்ளியில் படித்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.   இதில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அந்த  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதை சொல்லி இருக்கிறார்கள்.

 இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்,   சிறுமியிடம் நடந்ததை கேட்க , சிறுமி அழுது கொண்டே நடந்ததை சொல்லி இருக்கிறார்.  இதை அடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் நடத்திய விசாரணையில் தான் போலி மந்திரவாதி குறித்தும் திருமண தடை நீங்குவதற்காக தான் செய்த காரியம் குறித்தும் சொல்லி இருக்கிறார்.