8-ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி

 
rape

காரைக்காலில் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளியை கோட்டுச்சேரி போலீசார் கைது செய்தனர். 

Seelampur: Minor boy raped by friends, cousin, rod inserted in private  part; 2 arrested

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா இயங்கி வருகிறது. இங்கே மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பத்தாண்டுகளாக காவலாளியாக பணிபுரிந்து வரும் தரங்கம்பட்டியை சேர்ந்த முகமது அலி, வழக்கம் போல மாணவர்களை அதிகாலையில் எழுப்ப சென்றுள்ளார். அப்போது அங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவன் அலறி அடித்து எழுந்திருக்கவே, சக மாணவர்களும் விழித்துக் கொண்டனர். உடனடியாக  மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர்களின் பெற்றோர் மாணவனை சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டுச்சேரி போலீசார் முகமது அலியை கைது செய்து, அவர் மீது போக்சோ பிரிவின் வழக்கு பதிவு செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர். தங்கிப் படிக்கும் பள்ளி மாணவனுக்கு பள்ளி காவலாளியே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.