திருமணமானவருடன் பள்ளி மாணவி... மனைவிக்கு வந்த ஆத்திரம்

 
l

திருமணமான இளைஞருடன் பள்ளி மாணவி ஊர் சுற்றி உல்லாசமாக இருந்து வந்ததைக் கண்டு இளைஞரின் மனைவி ஆத்திரம் அடைந்து மாணவியின் பெற்றோரிடம் முறையிட,  விவகாரம் போலீசுக்கு சென்று இருக்கிறது.  இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மதுரையில் வில்லாபுரத்தைச் சேர்ந்த சிறுமி பிளஸ் ஒன் படித்து வருகிறார்.  சிறுமியின் வீட்டு அருகே வசிக்கும் பாட்டியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற பிளஸ் டூ மாணவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   பின்னர் அவரின் நண்பரான ஆதித்யா என்கிற இளைஞர்  செல்போனிலிருந்து அந்த மாணவர் மாணவியிடம் பேசியிருக்கிறார் . 

b

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஆதித்யாவும் அந்த மாணவியிடம் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு அரட்டை அடித்து வந்திருக்கிறார். இதற்கிடையில் ஆதித்யாவின் நண்பரும் டூவீலர் மெக்கானிக்குமான கார்த்திக்கும் அந்த மாணவியிடம் செல்போனில் பேசி அரட்டை அடித்து வந்திருக்கிறார்.  இதில் கார்த்திக் உடன் அந்த மாணவிக்கு அதிக பழக்கம் ஏற்பட்டு அவரை காதலிப்பதாக சொல்லி இருக்கிறார்.

 அவரை திருமணம் செய்து கொள்வதாக கார்த்திக்கும் சிறுமியிடம் மாணவி இடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.  கார்த்திக் ஏற்கனவே திருமணம் ஆனவர்.  அந்த மாணவியை வெளியே அழைத்து சென்று ஊர் சுற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கார்த்திக்.  

 இதை அறிந்ததும் ஆத்திரம் அடைந்த கார்த்திக்கின் மனைவி ,  மாணவி வீட்டிற்கு சென்று கணவனிடம் இனிமேல் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கண்டித்திருக்கிறார்.   இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்,  போலீசில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் விசாரணை நடத்தி ஆதித்யா, கார்த்திக் உள்ளிட்ட மூன்று பேர் மீது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.