கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை

 
tr

கர்ப்பிணி பெண் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர்.  கடனை வசூல் செய்ய வந்த ஏஜெண்ட்,  வீட்டில் இருந்த டிராக்டரை எடுத்துச் செல்ல முயன்ற போது அதை குறுக்கே நின்று தடுத்த கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளார்.  ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த பயங்கரம்.   இந்த கொடூரத்தின் செயலை செய்த ஏஜெண்ட்,  மகிந்திரா நிதி நிறுவனம் மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  மஹிந்திரா நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கிறது. 

 ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல் நிலையத்திற்கு  உட்பட்ட பரியநாத் பகுதியை சேர்ந்தவர் மிதிலேஷ் மேத்தா.   விவசாயியான  இவர் மாற்றுத்திறனாளி.   

ma

இவர் மஹிந்திரா  நிதி நிறுவனம் மூலம்  டிராக்டர் ஒன்று வாங்கியிருக்கிறார்.   இதற்கான கடன் தொகையினை திரும்ப செலுத்த முடியாமல் இருந்திருக்கிறார். கடன் தொகை 1.3 லட்சத்தை உடனே செலுத்தும்படி நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறது.   இதனால் கடனை வசூல் செய்ய ஏஜெண்ட் சென்றிருக்கிறார். 

பணத்தை ரெடி செய்து விட்டேன் .  அதனால் டாக்டரை எடுத்துச் செல்ல வேண்டாம் .  வங்கியில் உடனடியாக கட்டி விடுகிறேன் என்று சொல்லி  மிதிலேஷ்.  தன்னிடம் 1.2 லட்சம் ரூபாய் இருப்பதை காட்டி  இருக்கிறார்.   ஆனால் அந்த ஏஜெண்டோ,   வங்கி 1.3 லட்சம் ரூபாயை செலுத்த சொல்லி இருக்கிறது.    1.2 லட்சம்தானே உங்களிடம் இருக்கிறது என்று கேட்க,  மீதத்தை அப்புறம் செலுத்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார் மிதிலேஷ்.  ஆனால் ஏஜெண்டோ முழு தொகையும் செலுத்தினால்தான் டிராக்டரை விட்டு செல்லுவேன்.   இல்லையென்றால் எடுத்து தான் செல்வேன் என்று பிடிவாதமாக எடுத்துச் சென்று இருக்கிறார்.   

 அப்போது மிதிலேஷின் 27 வயது மகள் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளவர்,  டிராக்டரை  எடுத்துச் செல்வதை தடுத்து நின்று ஏஜெண்டிடம் மன்றாடி இருக்கிறார்.  ஆனால் கர்ப்பிணி ன் பேச்சை கேட்க மறுத்த ஏஜெண்ட்,  டிராக்டரை தொடர்ந்து ஓட்டிச் சென்று இருக்கிறார்.   இதில் இடை இடையே நின்று தடுத்த கர்ப்பிணிப் பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

tra

 உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கிராமத்தினர்.   நிதி நிறுவனம் மேலாளர்,  கடன் வசூல் ஏஜெண்ட் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.   உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர் .

போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.   குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய முடியுமா என்று உறுதி அளித்தனர்.   இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.   போலீசார் தனியார் நிதி நிறுவனத்தின் கடன் வசூல் ஏஜெண்ட்,  மேலாளர் உட்பட நான்கு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.

மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அனிஷா இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   அதில்,  சம்பவத்திற்கு நாங்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.   உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.   இந்த சம்பவம் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்படும்.   மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனத்தை பயன்படுத்தியது குறித்தும் விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.