மகனை காப்பாற்றச்சென்ற தாயின் ஆடையை அவிழ்த்து 4 பேர் பாலியல் வன்கொடுமை

 
ra

வயலுக்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.   அப்போது 38 வயது பட்டியலின பெண்ணின் ஆடையை அகற்றி பாலியல்  வன்புணர்வு செய்துள்ளார்கள்.   இதில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  

 தானாக முன்வந்து காயப்படுத்துதல், எந்த ஒரு பெண்ணையும் தாக்கும் அல்லது குற்றவியல் சக்தியை பயன்படுத்துவர் அல்லது அவளை நிர்வாணமாக இருக்க வற்புறுத்தும் நோக்கத்துடன் அத்தகைய செயலுக்கு தூண்டுதல் ,கொலை செய்ய முயற்சி, அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு, குற்றமிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

mo

 தனது மகன்களுக்கும் எதிர் பிரிவினருக்கும் இடையிலான சண்டையை தகராறு குறித்து அறிந்து வயலுக்கு வந்ததாக கூறியிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.  தான் சென்றபோது தனது மகன்களை எதிர் தரப்பினர் அடித்துக் கொண்டிருந்தார்கள் .  அதனை தடுக்கச் சென்ற தன்னையும் மதிக்காமல் என்னையும் அடித்து அவரது ஆடைகளை கிழித்து விட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார் அந்த பெண்.

இது குறித்து எஸ் பி. பலஸ் பண்சால் காயம் அடைந்த இருவரையும் மாவட்ட மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.  குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

 தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான தகராறில் பட்டியல் இனப்பெண் ஆடையை அகற்றி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று அந்த  நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.